கரணவாயில் குடும்ப மோதலில் பெண் உட்பட மூவருக்கு வெட்டு

யாழ். பருத்தித்துறை கரணவாய் – முதலைகுழி கிராமத்தில் சகோதரர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் பெண் ஒருவர் உட்பட 3 பேர் வாள்வெட்டுக்கு இலக்கான நிலையில் பருத்திதுறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் சந் திரமோகன் சஜிந்தன் (வயது 29), சண்முகம் சிவஞானசுந்தரம் (வயது 55), தேவராசா ரஞ்சிதா (வயது 35) ஆகியோரே வெட்டுக்காயமடைந்திருக்கும் நிலையில், பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும் சம்பவம் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு எதுவும் பதிவு செய்யப்படவில்லை எனப்பொலிஸர் கூறியிருக்கின்றனர். சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருக்கின்றனர்.