கமால் குணரட்ண, சவேந்திர சில்வா ஜெனரல்களாக பதவி உயர்வு

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமால் குணரட்ண, இராணுவத் தளபதி சவேந்திர சில்வா ஆகியோர் ஜெனரல்களாக தரம் உயர்த்தப்படவுள்ளனர். இவர்களுக்கான பதவி உயர்வை முப்படைத் தளபதியும், பாதுகாப்பு அமைச்சருமான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வழங்கவுள்ளார்.

இவர்கள் இருவரும் வன்னி இறுதிப் போரில் இரு படைப் பிரிவுகளைத் தலைமை தாங்கி வழிநடத்தியிருந்தனர். கமால் குணரட்ண 53ஆவது படைப் பிரிவுக்கும், சவேந்திர சில்வா 58ஆவது படைப் பிரிவுக்கும் தலைமை தாங்கியிருந்தனர்.

இறுதிப் போரின்போது இந்த இரு படைப் பிரிவுகளும் போர்க் குற்றங்கள், மனித உரிமைகள் மீறலில் ஈடுபட்டன என்று குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இதனிடையே, சவேந்திர சில்வாவை போர் குற்றவாளியாக அறிவித்து அமெரிக்கா பயணத் தடை விதித்துள்ளது.

இந்நிலையிலேயே, இவர்கள் இருவரும் இறுதிப் போர் வெற்றிக்காக உழைத்தமைக்காகவே ஜெனரல்களாகத்தரம் உயர்த்தப்படவுள்ளனர்.