ஈராக்கிலிருந்து படையினரை மீளப் பெறுகின்றது அமெரிக்கா

ஈராக்கில் இருந்து முதற் கட்டமாக 2 ஆயிரத்து 200 இராணுவத்தினரை அமெரிக்கா மீளப்பெற்றுள்ளது. ஈராக்கில் உள்ள தீவிரவாதக் குழுக்களை ஒடுக்குவதற்காக 5 ஆயிரத்து 200 இராணுவத்தினரை அனுப்பியிருந்தது. தற்போதைய சூழலில் ஈராக் இராணுவமே அந்தப் பணியை செய்யும் என்று கருதுவதாலேயே படையினரை மீளப் பெறுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

வருங்காலத்தில் ஏனைய வீரர்களும் அங்கிருந்து திருப்பி அழைக்கப்படுவர் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது தேர்தல் பிரசாரத்தின்போது, ஈராக்கில் நிலைகொண்டுள்ள அமெரிக்க இராணுவம் மீள அழைக்கப்படும் என்று கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.