பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயமும் தனிமைப்படுத்தப்பட்டது

சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் வைகுண்ட ஏகாதசி உற்சவத்தை நடத்தியமைக்காக பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

ஆலயத்தில் உற்சவத்தை நடத்திய அர்ச்சகர்கள், ஆலய பரிபாலன சபையை சேர்ந்தவர்களும் ஆலயத்திலும் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், உபயகாரர்கள திருவிழா காலத்தில் ஆலயத்திற்கு சென்ற பக்தர்கள், தீர்த்தத் திருவிழாவின்போது கடலில் நெருக்கமாக நின்றவர்களையும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரனின் ஆலோசனைக்கு அமைய பொன்னாலை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ச. சர்மிலன் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஆலயத்தில் பூசைகள் இடம்பெற தடைவிதிக்கப்படவில்லை என்றும், ஆனால் பக்தர்கள் வழிபட அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.