வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை – அமைச்சர் தினேஷ் குணவர்த்தன

சுமார் 40 நாடுகளில் தங்கியிருக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தூதரகங்கள், அலுவலகங்கள் மூலம் விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

நாடு திரும்ப எதிர்பார்த்துள்ளவர்களை அழைத்துவரும் நோக்கத்துடன், சம்பந்தப்பட்ட நாடுகளுடன் இராஜதந்திர பேச்சுக்களை நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வெளிநாடு சென்ற இலங்கையர்களில் 52 ஆயிரம் பேர், இதுவரை நாட்டுக்குத் திருப்பி அழைத்து வரப்பட்டுள்ளனர்.

மத்திய கிழக்கு, தென் ஐரோப்பிய நாடுகளுடன், ஜப்பான், கொரியா, மலேசியா, சிங்கப்பூர் முதலான நாடுகளிலும் பத்து இலட்சத்துக்கும் மேற்பட்ட இலங்கையர்கள் வேலை செய்கின்றனர். இதேவேளை தம்மை உரியமுறையில் பதிவு செய்து கொள்ளாத 5 இலட்சம் பேர் வரை வெளிநாடுகளில் வேலை செய்துவருகின்றனர்” என்றார்.