என்னுடைய விருப்பத்துக்கு மாறாக அரசின் தீர்மானங்கள் அமையாது – அமைச்சர் டக்ளஸ் நம்பிக்கை

இந்த அரசாங்கத்தில் என்னுடைய விருப்பத்தைப் புறக்கணித்து தீர்மானங்கள் ஒருபோதும் மேற்கொள்ளப்படமாட்டாது என்று கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

வேலணை சமுர்த்தி வங்கிச் செயல்பாடுகளை கணனி மயமாக்கும் அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:

“தற்போதைய அரசாங்கம் பெரும்பான்மை மக்களின் ஆதரவால் உருவாக்கப்பட்ட போதிலும் பாரபட்சமற்ற முறையிலேயே செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. தேசிய நல்லிணக்கம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் எனது விருப்பங்களுக்கு மாறாக அரசாங்கத்தின் தீர்மானங்கள் அமையாது என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எனக்கு உண்டு.

மேலும் கடந்த காலங்களில் மக்களின் தவறான தீர்மானங்களால் பல சந்தர்ப்பங்கள் தவறவிடப்பட்டன. தற்போது கிடைத்த சந்தர்ப்பத்தையாவது சரியாகப் பயன்படுத்தி சரியான தரப்புக்களுடன் இணைந்து எதிர்காலத்தை வளப்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.

நேற்று முன்தினம் நல்லூர், சிறுப்பிட்டி, புங்குடுதீவு மற்றும் வேலணை ஆகிய நான்கு சமுர்த்தி வங்கிகளின் செயல்பாடுகள்
கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால் கணனி
மயமாக்கப்பட்டிருந்தன.