அமெரிக்காவிடம் உள்ள மிகவும் ஆபத்தான ஆயுதங்கள்; பிரபல பத்திரிகையாளர் வெளியிடும் அதிர்ச்சித் தகவல்

“ரஷ்ய, சீன ஜனாதிபதிகள் இதற்கு முன்னர் கேள்விப்படாத பொருள் அமெரிக்காவிடம் உண்டு. 2018 ஆம் ஆண்டு அமெரிக்க அணு ஆயுதக்களஞ்சியத்தில் சேர்க்கப்பட்ட அந்த ஆயுதம், ஹிரோஷிமா, நாகசாகி மீது வீசப்பட்ட அணுகுண்டுகளை விட அதிக ஆற்றல் வாய்ந்தது.”

இவ்வாறு அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்தார் என பத்திரிகையாளரான பொப் உட்வர்ட் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கொரோனா தொற்று நோயை கையாண்ட விதம் குறித்து அமெரிக்க பத்திரிகையாளர் பொப் உட்வர்ட், ‘ரேஜ்’ என்ற புத்தகம் ஒன்றை எழுதி உள்ளார்.

இந்த புத்தகம் எதிர்வரும் 15 ஆம் திகதி வெளியிடப்படுகின்றது. இந்தப் புத்தகத்தில் இருக்கும் சில விடயங்களை ‘சி.என்.என் செய்தி’ வெளியிட்டுள்ளது. இந்தப் புத்தகத்தில், ஜனாதிபதி ட்ரம்பை உட்வர்ட் சந்தித்தபோது பேசிக் கொண்ட விடயங்களையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.