புதுக்குடியிருப்பில் தொற்று – 194 பேர் தனிமைப்படுத்தல்

புதுக்குடியிருப்பில் முதலாவது கொரோனா தொற்றாளி இனங்காணப்பட்டமையை தொடர்ந்து 65 குடும்பங்களை சேர்ந்த 194 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

புதுக்குடியிருப்பில் எழுமாற்றாக நடத்தப்பட்ட பி.சி.ஆர். சோதனையில் கடந்த சனிக்கிழமை ஒருவர் தொற்றாளியாக இனங்காணப்பட்டார். இதையடுத்து அவருடன் தொடர்புபட்ட65 பேரும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் 129 பேருமாக 194 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப் பட்டுள்ளனர்.

இதேவேளை, புதுக்குடியிருப்பு பகுதியில் தொற்றாளி சென்று வந்த இடங்கள் கிருமி தொற்று நீக்கம் செய்யப்பட்டுள்ளன.