கொரோனா தொற்றாளளர் 668 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டனர் – நான்கு பேர் மரணம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 41 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. நாட்டில் நேற்றிரவு நிலவரத்தின் அடிப்படையில் மேலும் 668 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அதேவேளையில் நேற்றைய தினம் 4 கொரோனா மரணங்களும் பதிவாகியுள்ளது.

ஒக்ரோபர் 4 ஆம் திகதிக்கு பின் ஏற்பட்ட மினுவாங்கொடை – பேலியகொடை மற்றும் சிறைச்சாலைகள் கொரோனா பரவல் கொத்தணியில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 37 ஆயிரத்தைத்தாண்டியது.

நாட்டில் ஜனவரி மாதம் முதல் நேற்றிரவு வரை 41 ஆயிரத்து 48 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 32 ஆயிரத்து 701 பேர் முழுமையாகச் சுகமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 191 பேர் உயிரிழந்தனர்.