ஒக்ஸ்போர்ட் பல்கலையின் தடுப்பூசி இலங்கைக்கு – ஜனாதிபதியின் செயலர் தகவல்

இங்கிலாந்து ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உருவாக்கிய அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் கணிசமான அளவு இந்தியாவில் உற்பத்தியைத் தொடங்கும் போது இலங்கைக்கு வழங்கப்படலாம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் என ஜனாதிபதியின் மூத்த ஆலோசகர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.

இந்தியா – இலங்கை இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால இரு தரப்பு உறவுகளை கருத்தில் கொண்டு, தடுப்பூசியின் நியாயமான சதவீதத்தில் இலங்கைக்கு இலவசமாக வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது, வீரதுங்க தெரிவித்துள்ளார்.

மருத்துவ பரிசோதனைகளின் போது அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி காட்டிய உயர் செயல்திறன் அளவைக் கருத்தில் கொண்டு, இந்தியாவில் ஐந்து மருந்து நிறுவனங்கள் பெருமளவில் தடுப்பூசி தயாரிக்கும் பணியை மேற்கொண்டுள்ளன என்று உயர் ஸ்தானிகர் கூறியுள்ளார்.

மற்றைய நாடுகள் மற்றும் மருந்து நிறுவனங்கள் உருவாக்கிய தடுப்பூசிகளைப் பற்றி ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் வீரதுங்க கூறினார். பல்வேறு தடுப்பூசிகளால் செய்யப்பட்ட முன்னேற்றங்கள் மற்றும் அவற்றின் செயல்திறன் நிலைகளை உன்னிப்பாக ஆய்வு செய்ய கொழும்பில் உள்ள உலக சுகாதார நிறுவனத்தின் அலுவலகத்திற்கு விஜயம் செய்ததாக அவர் தெரிவித்தார்.

இதுவரை அமெரிக்கா கிட்டத்தட்ட ஆறு இலட்சம் பேருக்கு பைசர் தடுப்பூசியை வழங்கியுள்ளது என்றும், இங்கிலாந்து தனது மக்களில் சுமார் 8 இலட்சம் பேருக்கு கொவிட்-19 வைரஸக்கு எதிரான தடுப்பூசி போட்டுள்ளதாகவும் அவர் கூறினார். ரஷ்யா இப்போது தங்கள் குடிமக்களுக்கு ஸ்புட்னிக் வி தடுப்பூசியை வழங்கி வருகிறது. எவ்வாறாயினும், வேகமாக பரவும் வைரஸக்கு எதிராக இலங்கை இன்னும் தடுப்பூசி போடவில்லை .என்றும், விரைவில் தடுப்பூசி பெறுவதற்காக ஜனாதிபதி பணிக்குழுவை நியமிப்பது குறித்து ஜனாதிபதி பரிசீலித்து வருவதாகவும் லலித்வீரதுங்க மேலும் கூறினார்.