சவுதியிலிருந்து நாடு திரும்பிய 5 பேருக்கு கொரோனா உறுதி; தொற்றாளர் எண்ணிக்கை 3,147 ஆக அதிகரிப்பு

இலங்கையில் மேலும் ஐவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 147 ஆக அதிகரித்துள்ளது.

சவுதி அரேபியாவிலிருந்து நாட்டுக்கு வருகை தந்த 5 பேருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவளை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள 189 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இந்த தொற்றிலிருந்து 2 ஆயிரத்து 946 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் 63 பேர் வைத்திய கண்காணிப்பில் உள்ளமையோடு, இலங்கையில் இதுவரையில் 12 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.