21 வயதில் மேயராகும் இளம்பெண்!

கேரள அரசியல் பல ஆச்சரியங்களின் உற்பத்தி நிலையமாக இருப்பதில் ஆச்சரியமில்லை. இந்த வரிசையில் இன்னொரு ஆச்சரியமாக 21 வயது இளம்பெண்ணுக்கு கேரள தலைநகர் திருவனந்தபுரத்தின் மேயர் ஆகும் ஒரு அரசியல் அற்புதத்தை அம்மாநில ஆளுங்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிகழ்த்தப்போகிறது என்ற தகவல்கள் வெளிவந்துள்ளன.

அண்மையில் நடந்த கேரள உள்ளாட்சித் தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி மொத்தமுள்ள 100 இடங்களில் 52 இடங்களில் வென்றது. பாஜக 34 இடங்களிலும் காங்கிரஸ் கூட்டணி 10 இடங்களிலும், சுயேச்சை 4 இடங்களிலும் வென்றனர்.

பெரும் வெற்றிபெற்றது. இதில் திருவனந்தபுரம் மாநகராட்சியில் முடவன்முகல் வார்டில் இருந்து அக்கட்சி வேட்பாளர் செல்வி ஆர்யா ராஜேந்திரன் வெற்றிபெற்றார். 21 வயதேயான ஆர்யா ராஜேந்திரனை திருவனந்தபுரம் மேயர் வேட்பாளராக திருவனந்தபுரத்தை உள்ளடக்கிய கட்சியின் மாவட்டக் குழு பரிந்துரைத்துள்ளது. இந்தத் தேர்வுக்கு கட்சியின் மாநிலக் குழு ஒப்புதல் அளித்தால் இந்தியாவின் மிக இளைய வயது மேயராக ஆர்யா ராஜேந்திரன் திகழ்வார்.