இன்று இலங்கை வரவிருந்த விமானங்கள் திடீரென ரத்து – புதிய கொரோனா பரவலையடுத்து நடவடிக்கை

இலங்கைக்கு இன்று வருவதற்குத் திட்டமிட்டிருந்த சுற்றுலாக் குழுக்களுடனான அனைத்து விமானசேவைகளும் இரத்துச் செய்யப் பட்டுள்ளன என கட்டுநாயக்கா விமான நிலைய அதிகாரி தெரிவித்தார்.

விமான நிலையங்கள் மீண்டும் இன்று திறக்கப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. அத்தோடு, முதன்முறையாக இலங்கைக்கு வருகை தர ரஷ்ய சுற்றுலாக் குழுவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என இலங்கை சிவில் விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்திருந்தது.

இதன்படி இன்று 200 இற்கும் மேற்பட்ட ரஷ்ய சுற்றுலாப் பயணிகளுடன் விமானங்கள் கட்டுநாயக்கா மற்றும் மத்தள சர்வதேச விமான நிலையங்களுக்கு வருகை தரவுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஐரோப்பா முழுவதும் பரவிவரும் புதிய கொரோனா வைரஸ் தாக்கத்தால் முன்னார் திட்டமிடப்பட்ட விமான சேவைகள் இரத் துச் செய்யப்பட்டுள்ளன.