மருதனார்மடம் கொத்தணியில் மற்றொரு வியாபாரிக்குத் தொற்று

யாழ்.மருனார்மடம் சந்தையில் வியாபாரத்தில் ஈடுபட்டுவருகின்ற – உடுவிலைச் சேர்ந்த – மற்றொருவருக்கு நேற்று கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வர் தெரிவித்தார்.

யாழ்.பல்கலைக்கழக மருத் துவபீட ஆய்வுகூடத்தில் 124 பேருக்கு இன்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் ஒருவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்றுக்குள்ளானவர் மருதனார் மடம் சந்தையில் வியாபார நடவடிக்கையில் ஈடுபடும் உடுவிலைச் சேர்ந்தராவார். 14 நாள்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் அவருக்குத் தொற்று அடையாளம் காணப்படவில்லை. தனிமைப்படுத்தல் நிறைவு பெறும் போது மேற்கொள்ளப்படும் இரண்டாம் கட்ட பி.சி.ஆர். பரிசோதனையிலேயே அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.