தமிழ் அரசியல் கைதிகளை அரசு விடுவிக்க வேண்டும் – வலி. மேற்கு பிரதேச சபை தீர்மானம்

தமிழ் அரசியல் கைதிகள் கொரோனாவின் பிடியில் சிக்கித் தவிக்கின்ற நிலையில், அவர்களை விடுவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலி. மேற்கு பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சகோதர சிங்கள மக்களும் முற்போக்கு சிங்கள அரசியல் தலைவர்களும் இந்த விடயத்தை மனிதநேய ரீதியில் அணுகி அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் என்றும் இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டது.

வலி.மேற்கு பிரதேச சபையின் 34 ஆவது கூட்டம் நேற்றுமுன்தினம் தவிசாளர் த.நடனேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது, அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக உறுப்பினர் ந.பொன்ராசா விசேட பிரேரணை ஒன்றை சமர்ப்பித்தார். அது சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்டு தீர்மானமாக எடுக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

நிறைவேற்றப்பட்ட தீர்மானம் உரிய தரப்புகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று தவிசாளர் தெரிவித்தார்.