அரசின் பொய் இன்று அம்பலமாகி விட்டது – ஜே.வி.பி. சொல்கிறது

மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டினால் 11 சிறைக் கைதிகள் உயிரிழந்தனர். உண்மையை மூடி மறைக்க அரசாங்கம் சொன்ன பொய்கள் விசாரணை அறிக்கைகளில் அம்பலமாகியுள்ளது என்று மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

ஜே.வி.பி தலைமையகத்தில் நேற்று அவர் நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு சொன்னார். மேலும், மஹர சிறைச்சாலையில் 11 சிறைக் கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். வத்தளை நீதிவான் நீதி மன்றத்தில் அது சம்பந்தமான வழக்கு விசாரிக்கப்படு கின்றது. இதில் 11 பேரில் 8 பேர் சுடப்பட்டதாலேயே இறந்ததனர் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகள் அமைச்சர் இந்த நிலைமையை மூடிமறைக்க துப்பாக்கிச் சூட்டினால் எவருமே இறக்கவில்லை என்றார். ஆனால், விசாரணைக் குழு அறிக்கைகளில் துப்பாக்கிச் சூட்டினால் சிறைக்கைதிகளின் மரணங்கள் சம்பவித்தமை உறுதியாகின்றது. அமைச்சர்களின் பொய் அம்பலமாகியுள்ளது” என்றார்.