இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் தொகை 39 ஆயிரத்தை தாண்டியது

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 39 ஆயிரத்தைத் தாண்டியது. நாட்டில் நேற்று மாலை 6 மணிவரையான நிலைவர அறிக்கையின்படி 406 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாகக் கண்டறியப்பட்டனர்.

இதனால், ஒக்ரோபர் 4ஆம் திகதிக்குபின் ஏற்பட்ட மினுவாங்கொடை – பேலியகொடை மற்றும் சிறைச்சாலைகள் கொரோனா பரவல் கொத்தணியில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35 ஆயிரத்தைத் தாண்டியது.

நாட்டில் ஜனவரி மாதம் முதல் இன்று வரை 39 ஆயிரத்து 45 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 30 ஆயிரத்து 568 பேர் முழுமையாகச் சுகமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 184 பேர் உயிரிழந்தனர்.