
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தனிமைப்படுத்தலில் உள்ளோர் வெளியில் நடமாடாதவாறு இராணுவம் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் கட்டுப்படுத்துவதற்கு நேற்றுத் தீர்மானிக்கப்பட்டது
யாழ்.மாவட்டத்தில் சுயதனிமைப்படுத்தலில் உள்ளோர் வெளியில் நடமாடுவதைக் கட்டுப்படுத்துதல் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் மாவட்ட செயலக கேட்போர் கூடத் தில் மாவட்ட அரச அதிபர் க.மகேசன் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்திலேயே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டது.