அரசியல் ரீதியில் அணுகுவதை அரசு உடன் கைவிடவேண்டும் – அநுரகுமார திஸாநாயக்க வலியுறுத்து

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம் மக்களின் உடல்கள் விவகாரத்தை அரசாங்கம் அரசியல் ரீதியில் அணுகாமல் விஞ்ஞான சுகாதார தொழில்நுட்ப ரீதியில் அணுக வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணி தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.