இலங்கையில் 579 புதிய கொரோனா தொற்றாளர்கள் – ஒருவர் மரணம்

இலங்கைக்குள் மேலும் ஒரு கோரோனா மரணம் நேற்று பதிவாகியுள்ளது. இதனையடுத்து நாட்டில் கொரோனாவினால் மரணமானோரின் மொத்த எண்ணிக்கை 184ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை நேற்று மாத்திரம் 579 புதிய கொரோனா தொற்றாளிகள் இனங்காணப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.