15 வயதான சிறுவன் உட்பட இருவர் கொரோனாவுக்கு நேற்று பலி

கொரோனா தொற்றால் அடையாளம் காணப்பட்ட நிலையில் மேலும் 02 பேர் நேற்றைய தினம் உயிரி ழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரி ழந்தவர்களின் எண்ணிக்கை 183 ஆக உயர்ந்துள்ளது.

தங்கொட்டுவ பகுதியைச் சேர்ந்த 15 வயதான சிறுவன் ஒருவர், கொழும்பு – 07 சேர்ந்த 72 வயதான பெண் ஒருவர் ஆகியோரே நேற்றைய தினம் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

தங்கொட்டுவ பகுதியைச் சேர்ந்த 15 வயதான சிறுவன் ஒருவர் மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் சிகிச் சைப் பெற்று வந்த நிலையில் கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டதை அடுத்து தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா, இரத்த விஷமானமை மற்றும் லுகேமியா புற்றுநோய் காரணமாக 2020 டிசம்பர் 22 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

கொழும்பு – 07 சேர்ந்த 72 வயதான பெண் ஒருவர் கொ ரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா காரணமாக 2020 டிசம்பர் 20 ஆம் திகதி வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். அதன்படி இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 183 ஆக உயர்ந் துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரி வித்துள்ளது.