பிரிட்டன் விமானங்கள் இறங்கத் தடை – புதிய வகைக் கொரோனா பரவும் அபாயத்தை அடுத்து நடவடிக்கை

பிரிட்டன் விமானங்கள் நாட்டுக்குள் தரையிறங்க அனுமதிக்கப்படாது என்று இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. திங்கட்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் இந்தத் தடை உத்தரவு நடைமுறைக்கு வந்ததாக விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் உப தலைவர் ரஜீவ் சூரியாராச்சி தெரிவித்தார்.

மாற்றமடைந்த கொரோனா வைரஸ் தொற்று இங்கிலாந்தில் மிக வேகமாகப் பரவி வருகின்றது. இதையடுத்து அந்த நாட்டுடனான போக்குவரத்தை ஐரோப்பிய நாடுகள் உட்பட 40 உலக நாடுகள் துண்டித்துள்ளன. இந்நிலையிலேயே இலங்கையும் பிரிட்டனின் விமானங்களுக்குத் தடை விதித்துள்ளது.