இலங்கையில் மேலும் 370 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் மேலும் 370 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

அதன்படி நாட்டில் இதுவரை தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 37 ஆயிரத்து 407 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நேற்றைய தினம் 415 பேர் குணமடைந்தனர். இதனால், குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 28 ஆயிரத்து 682 ஆக காணப்படுகின்றது.

தற்போது தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களில் 8 ஆயிரத்து 549 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வரும் அதே வேளை 438 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர்.