சஜித் தரப்புடன் இணைய தயாராகிறது சுதந்திர கட்சி?

பெரமுன தலைமையிலான கூட்டு அரசாங்கத்தில் இருந்து வெளியேறி சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயல்பட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முயற்சிகளை எடுத்துள்ளது என்று அந்தக் கட்சியின் உயர் மட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.

இது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உயர் மட்டத் தலைவர்கள் பல தடவைகள் கூடிப் பேச்சுக்களை நடத்தி முடிவுகளை எடுத்துள்ளனர். ஆளும் கட்சியினர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களை அலட்சியம் செய்கின்றனர். இதற்கு உரிய பதிலை அவர்கள் வழங்க வேண்டும் என்று உயர் மட்டக் கூட்டத்தில் ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.

இதன்போதே, ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயல்படுவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது என்று தெரிய வருகின்றது.