நெடுந்தீவு கடற்பரப்பில் 4 இந்திய மீனவர் கைது

நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் நால்வர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு புதுக்கோட்டையிலிருந்து விசைப்படகில் வந்த நான்கு இந்திய மீனவர்களே நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு இவ்வாறு கைது செய்யப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் காரைநகர் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடவடிக்கையை முன்னெடுக்க இருப்பதாகவும், கொரோனா தொற்று அபாயம் காரணமாக விசாரணையின் பின்னர் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடற்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.