யாழ். பல்கலைக்கழக மாணவனுக்கு கொரோனா

யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாக மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தை சேர்ந்த இந்த மாணவன் வெளிநாடு செல்வதற்காக கொழும்பில் தனியார் மருத்துவமனை ஒன்றில் பி.சி.ஆர். பரிசோதனை செய்துள்ளார். இதன்போதே, அவருக்கு தொற்றிருப்பது உறுதியானது.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில் அவர், ஐந்து நண்பர்களுடன் நெருங்கிப் பழகினார் என்று தெரிவித்துள்ளார். அத்துடன், பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளில் இணையவழி மூலம் மாத்திரமே கலந்து கொண்டுள்ளார்.

இதேவேளை, அவருடன் பழகிய குறித்த ஐவர் தொடர்பாக சுகாதாரப் பிரிவினர் கவனம் செலுத்திவருகின்றனர். அத்துடன் அவர் வவுனியாவில் தங்கியிருந்த பகுதிகள் தொடர்பிலும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.