சமூக ஊடக பதிவர்களை பதிய முடிவு

பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளத்தைப் பயன்படுத்துவோரை பதிவு செய்யும் நடைமுறை அமைச்சு மட்டத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்கள் தொடர்பாக ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை குறைக்கவே சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவோரை பதியும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.