உலக அரங்கிற்குச் செல்லும் சூரரைப் போற்று

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் தீபாவளி ஸ்பெஷலாக வெளியான படம் சூரரைப் போற்று. திரையரங்கில் ரிலீஸாகாமல் நேரடியாக பிரைம் ஓடிடியில் வெளியானது சூரரைப் போற்று. சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்த இந்தப் படத்தில் அபர்ணா முரளி, ஊர்வசி, கருணாஸ், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.

ஏர் டெக்கான் ஜி.ஆர்.கோபிநாத் வாழ்க்கையை மையமாகக் கொண்டு, கமர்ஷியலாக உருவாகியிருந்தது சூரரைப் போற்று. திரையரங்கில் வெளியாகாமல், பெரிய பட்ஜெட்டில் உருவாகி நேரடியாக ஓடிடியில் வெளியான முதல் தமிழ் படம் இது. வெற்றி பெறுமா என சந்தேகத்தில் இருந்த நிலையில் பெரிய வரவேற்பை பெற்றது சூரரைப் போற்று. வருமான ரீதியாகவுமே படம் வெற்றிதான்.

இந்நிலையில், கூடுதல் மகிழ்ச்சியாக சூரரைப் போற்று படமானது கோல்டன் க்ளோப் விருது விழாவில் திரையாக தேர்வாகியிருக்கிறது. இவ்விழா 2021ஆம் ஆண்டு ஜனவரியில் நடக்க இருக்கிறது. இவ்விழாவில் சூரரைப் போற்று திரையாக இருப்பதால், படக்குழு பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.