படப்பிடிப்பை துவங்கிய வெற்றிமாறன்

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தனுஷ் நடித்த அசுரன் படத்துக்குப்பிறகு, வெற்றிமாறன் இயக்கத்தில் இரண்டு படங்கள் உருவாக இருந்தது. சூர்யா நடிப்பில் வாடிவாசல் மற்றும் சூரி நாயகனாக நடிக்கும் ஒரு படத்தை இயக்க இருந்தார். இந்த இரண்டு படங்களும் இப்போது வெற்றிமாறன் இயக்கவில்லை.

மூன்றாவதாக வேறு ஒரு கதையுடன் சூரி மற்றும் பாரதிராஜா லீட் ரோலில் நடிக்க படம் ஒன்றை இயக்க இருக்கிறார். இந்தப் படம் குறுங்கதை ஒன்றை மையமாகக் கொண்டது. எழுத்தாளர் ஜெயமோகனின் ‘துணைவன்’ எனும் கதையை மையமாகக் கொண்டு தான், சூரி நடிக்கும் படத்தை உருவாக்குகிறார்.

முந்தைய படமான அசுரன் படம் கூட, பூமணியின் வெக்கை நாவலை மையமாகக் கொண்டு உருவானது என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது, வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிக்கும் படத்துக்கான பிரம்மாண்ட செட் வேலைகள் சத்தியமங்கலம் காடுகளில் நடந்துவருகிறது. முழு படத்தையும் இந்த சத்தியமங்கலம் காடுகளில் தான் படமாக்க இருக்கிறார் வெற்றிமாறன். படத்துக்கான உடல்கட்டுக்காக கடும் உடற்பயிற்சிப் பணிகளில் இருக்கிறார் சூரி. குறுகிய காலத்துக்குள் முழுபடப்பிடிப்பையும் முடித்துவிட திட்டமாம்.

சூரிக்கு இணையான கேரக்டரில் பாரதிராஜா படத்தில் நடிக்கிறார். படத்துக்கு இளையராஜா இசையமைக்க இருக்கிறார்.