விஜய் நடிப்பில் உருவாகும் ‘மாஸ்டர்’ – பெங்கலுக்கு வெளிவரத் தயாராகின்றது

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் படம் மாஸ்டர். விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம்.

அனிருத் இசையமைக்க, சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மாநகரம், கைதி படங்களைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜின் மூன்றாவது படம் இது. கடந்த ஏப்ரல் மாதமே வெளியாகியிருக்க வேண்டியது, கொரோனாவினால் தள்ளிப்போய், பொங்கலுக்கு வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

கடந்த நாட்களில் படத்துக்கான சென்சார் சான்றிதழுக்கு அனுப்பியிருந்தது மாஸ்டர் படக்குழு. சென்சாரிலும் யு/ஏ பெற்றிருப்பதாக ஒரு தகவல். இந்த நிலையில், படத்தைப் பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திரையரங்க உரிமையாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். 1000 திரையரங்குகளில் வெளியாகும் என்கிறார்கள். அதுமட்டுமல்ல, மலேசியாவில் ‘மாஸ்டர் பொங்கல்’ என விநியோகஸ்தர்கள் விளம்பரத்தையே தொடங்கிவிட்டார்கள். ரசிகர்களும் மாஸ்டர் பொங்கலை இணையத்தில் டிரெண்ட் செய்து வருகிறார்கள்.

இப்படி, எல்லா பக்கமும் மாஸ்டர் பொங்கலுக்குத்தான் என உறுதியாக இருக்கிறது. ஆனாலும், தயாரிப்பு தரப்பில் பொங்கல் ரிலீஸ் என அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எல்லா அப்டேட்டையும் உடனுக்குடன் அறிவித்த மாஸ்டர் டீம், இந்த ரிலீஸ் குறித்து ஏன் அறிவிப்பை இன்னும் வெளியிடாமல் இருக்கிறது என்று தெரியவில்லை. ரசிகர்களின் எதிர்பார்ப்பை எப்போது பூர்த்தி செய்யப் போகிறது மாஸ்டர் டீம்? அதோடு, புத்தாண்டுக்குள் பட ரிலீஸ் குறித்த அறிவிப்பு முறையாக வந்துவிடும் என்கிறார்கள்.