மேல் மாகாணத்தை விட்டு யாரும் வெளியேறாதீர்கள் – இராணுவ தளபதி கோரிக்கை

விடுமுறை நாள்களில் மேல்மாகாணத்தை விட்டு யாரும் வெளியேற வேண்டாம் என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான வார இறுதி அறிக்கைகள் பரிசீலிக்கப்பட்டதைத் தொடர்ந்து இது தொடர்பில் ஒரு முடிவு எட்டப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பண்டிகை காலங்களில் ஊரடங்கு உத்தரவு அல்லது தனிமைப்படுத்தல் உத்தரவுகளை விதிப்பது தொடர்பில் அதிகாரிகள் இன்னும் ஒரு முடிவை எட்டவில்லை. நாட்டில் நிலவும் தற்போதைய நிலைமையைக் கருத்தில்கொண்டு தேவை ஏற்பட்டால் எந்த நேரத்திலும் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம்.

மேலும் வைரஸ் பரவலைத் தடுக்க அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு பொதுமக்கள் முழுமையான ஆதரவு வழங்க வேண்டும்” என்றார்.