நத்தார் பண்டிகை ஆராதனைகளில் பங்குகொள்ள 25பேர்களுக்கு மாத்திரம் அனுமதி

மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்பு செயலனியின் அவசர கூட்டம் இன்று மாவட்ட வெயலகத்தில் மவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருநாகரன் தலைமையில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் பண்டிகைகாலங்களில் மக்கள் எவ்வாறு செயற்படவேண்டம் என்பது தொடர்பாகவே ஆராயப்பட்டது.

நத்தார் பண்டிகை அதனை தொரந்து புத்தாண்டு அதன்பின் பொங்கள் பண்டிகை என தொடர்ச்சியாக பண்டிகை காலமாகையினால் மக்கள் கொரோனா தொற்றில் இருந்த பாதுகாப்புடன் செயல்ப்பட்டு நாளுக்கு நாள் அதிகதித்து வருகின்ற கொரோனாவில் இருந்த மக்களை மிகவும் அவதானத்துடன் செயல்படும்படி அரசாங்க அதிபர் வேண்டுகொள் விடுத்துள்ளார்.

தேவாலையங்களுக்கு நத்தார் பண்டிகை விசேட ஆராதனைகளில் 25பேர்கள் மாத்திரம் கலந்து கொள்லாம் அங்கு வருகின்றவர்கள் கன்டிப்பாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றப்படல் வேண்டும் அவ்வாறு சுகாதார நடைமுறைகளை அலட்சியம் செய்பவர்களை அவதானிப்பதற்கு பொலிஸ் விசேடகுழுவினருடன் பொது சுகாதார பரிசோதகர்கள் இணைக்கப்பட்டுள்ளனர் அவர் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்துவது தவிர்க்கமுடியாததாகும்.

பண்டிகை காலங்களில் பொருட்களை கொள்வனவு செய்யவுள்ள மக்கள் கடைசிவரை காத்திருக்காது மக்கள் நெரிசல் ஏற்படாதவகையில் செயல்படுவது அவசியமாகு கடை உரிமையாளர்கள் கவனமாக வடிக்கையாளர்களை சுகாதார நடைமுறைகளுடன் நடத்துவது அவசியமானதாக கருதப்படுகின்றது.

இம்முறை எழிமையானமுறையில் பண்டிகைகளை பொதுமக்கள் கொண்டாடுவதுதான் கொரோனா தொற்றினை குறைத்துக்கொள்ள ஏதுவாக இருக்கும் என சுகாதாரத்துறையினர் மக்களுக்கு தொடர்ச்சியாக ஆலோசனை வழங்கிவருகின்றனர்.

கொரோனா தொற்றினை நமது இலங்கையில் இருந்து இல்லாது ஒழிப்பதற்கு ஒவ்வரு தனி மனிதனும் தங்களின் முழுமையான ஒத்துளைப்பை வழங்கி விரைவில் நமது நாட்டை கொரோனா அற்ற நாடாக மாற்றி இயல்பு வாழ்கையை வாழ்வதற்கு சகல தரப்பினரும் ஒத்துளைப்பை வழங்குவது அவசியமாகும்.