எம்.பியாகிறார் அத்துரலிய தேரர் – எமது மக்கள் சக்தி பாராளுமன்றத்துக்கு அனுப்புகின்றது

அபே ஜன பல (எமது மக்கள் சக்தி) கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக அத்துரலிய ரத்ன தேரர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்தத் தகவலை தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

ஓகஸ்ட்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அபே ஜன பல கட்சிக்கு கிடைத்த வாக்குகளின் அடிப்படையில் ஒரு தேசிய பட்டியல் ஆசனம் ஒதுக்கப்பட்டது. முன்னதாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை முதன்மை வேட்பாளராகக் கொண்டு குருநாகல் மாவட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.

அதனால் அந்தக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கலகொட அத்தே ஞானசார தேரருக்கு வழங்கக் கட்சிக்குள் ஏற்பாடுகள் நடந்தன. எனினும் அவருக்கு வழங்குவதில் எதிர்ப்பும் இருந்து வந்தது. இந்த நிலையில் அபே ஜன பல (எமது மக்கள் சக்தி) கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக அத்துரலிய ரத்ன தேரர் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் அறிவித்துள்ளார்.