அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் வாகனத்தினை மறித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

அமைச்சர் வாசுதேவநாணயக்கார இன்று எஹெலியகொடவிற்கு விஜயம் மேற்கொண்டவேளை பொதுமக்கள் வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதால் பதட்ட நிலை உருவானது.
நீர்விநியோக திட்டமொன்றை ஆரம்பித்து வைப்பதற்காக அமைச்சர் எஹெலியகொடவிற்கு விஜயம் மேற்கொண்டார்.

அவ்வேளை தலப்பிட்டிய நகர மக்கள் வலவுத்த வீதியை மறித்து அமைச்சரின் பயணத்தினை தடுத்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

தங்கள் பகுதி ஊடாக மற்றுமொரு நகரத்திற்கு நீர் விநியோக திட்டத்தினை ஆரம்பித்து வைப்பதற்கு முன்னர் அமைச்சர் தங்கள் பகுதிக்கு உரிய நீர் விநியோகத்தினை வழங்கவேண்டும் என மக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.