அஜித்துக்காக காத்திருக்கும் இயக்குநர்

அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் உருவாகிவரும் படம் வலிமை. ஒருபக்கம் படத்துக்கான இசையமைப்பில் பிஸியாக இருக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா. இன்னொரு பக்கம் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார் இயக்குநர் ஹெச்.வினோத்.

வலிமைக்குப் பிறகு அஜித்தின் அடுத்தப் படத்தை சுதாகொங்கரா இயக்குவதாக சொல்லப்படுகிறது. கோகுலம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் பணிகள் போய்க் கொண்டிருப்பதாக சொல்கிறார்கள். வலிமை நேரத்திலேயே சுதாகொங்கரா சொன்ன கதையை அஜித் பிடித்திருந்ததாக சொல்லியிருக்கிறார். ஆனால், படம் குறித்த எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.

அஜித்தின் ஆஸ்தான இயக்குநராக இருப்பவர் விஷ்ணுவர்தன். அஜித்துக்கு பில்லா, ஆரம்பம் என இரண்டு பிரேக் திரைப்படங்களைக் கொடுத்தவர் இவர். அஜித்துக்கு கதை சொல்லிவிட்டு நீண்ட நாளாக காத்திருக்கிறார். பொதுவாக மற்ற இயக்குநர்கள், வேறு ஹீரோஸ் கிடைத்தால் படத்தை முடித்துவிட்டு, மீண்டும் அஜித்துக்காக கதை சொல்ல வருவார்கள். ஆனால், விஷ்ணுவர்தன் அப்படியானவர் அல்ல. வேறு எந்தப் படமும் கமிட்டாகாமல் அஜித்துக்காக காத்திருப்பார்.

சமீபத்தில் இந்தியில் சித்தார் மல்கோத்ரா, கியாரா அத்வானி நடிப்பில் ஷீர்ஷா எனும் படத்தை எடுத்துமுடித்துவிட்டார். இனி, அஜித்துக்காக என காத்திருப்பதாக ஒரு தகவல். ஏனெனில், சுதாகொங்கரா படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாததால், நமக்கும் ஒரு வாய்ப்பு இருக்கிறது என்று காத்துக் கொண்டிருக்கிறாராம்…! ஏனெனில், அஜித்தின் படத்தில் எப்போதுவேண்டுமென்றாலும் இயக்குநர்கள் மாற்றம் நிகழலாம்.. ஆக, அஜித் பார்வை விஷ்ணுவர்தன் மேல் விழுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.