பிரித்தானியாவில் 1.38 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது

பிரித்தானியாவில் கடந்த ஒரு வாரத்தில் 1,38,000 பேருக்கு கொரோனாத் தொற்றுக்கான தடுப்பூசி செலுத்தப்பட்டதாக அமைச்சர் நதிம் ஜஹாவி (Nadhim Zahawi)தெரிவித்துள்ளார்.

பைசர் மற்றும் பயோன்டெக் நிறுவனங்கள் தயாரித்த தடுப்பூசி போடும் பணி கடந்த 8 ஆம் திகதி தொடங்கிய நிலையில், இத்தனை நபர்களுக்கு செலுத்தப்பட்டிருப்பது சிறந்த ஆரம்பம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிப்படைத்தன்மை முக்கியம் என்றும், பிரித்தானியாவின் மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுமெனவும் என்றும் இந்த எண்ணிக்கை இனி அதிகரிக்கும் என்றும் அமைச்சர் நதிம் ஜஹாவி உறுதி அளித்துள்ளார்.