பதவி இழந்ததும் அழுதார் ஆனல்ட்

யாழ். மாநகர சபையின் வரவு – செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டமையை அடுத்து முதல்வர் இ.ஆனல்ட் கண்ணீர் விட்டு அழுதார்.

யாழ். மாநகர சபையின் வரவு – செலவுத் திட்டம் நேற்று இரண்டாவது தடவையாகவும் தோற்கடிக்கப்பட்டது. ஆதரவாக 21 வாக்குகளும், எதிராக 24 வாக்குகளும் கிடைத்தன.

இரண்டாவது முறையாகவும் வரவு – செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்ட மையால் சோகம் தாளாமல் தனது அலுவலக அறைக்கு சென்றார். அங்கு கண்ணீர் விட்டு அழுத, அவரை எதிர்க் கட்சி உறுப்பினர்கள் தேற்றினர்.