சிறையில் பலியான தொற்றாளர்கள் உடல்களை மட்டும் புதைத்தமை ஏன்? ராஜித சேனாரத்ன கேள்வி

இலங்கை தவிர ஏனைய நாடுகள் கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை புதைப்பதற்கு அனுமதித்துள்ளன என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

சில பிரிவு மக்களுக்கு எதிரான இன உணர்வுவின் அடிப்படையிலேயே கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை புதைப்பதற்கு அரசு அனுமதி மறுத்துள்ளது எனவும் ராஜித கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

“முஸ்லிம்களின் நம்பிக்கைகளின் அடிப்படையில் உடல்கள் தகனம் செய்யப்படுவதில்லை. உடல்கள் அடக்கம் செய்யப்படுகின்றன . உடல்களைப் புதைப்பதால் நிலடித்தடி நீர் பாதிக்கப்படும் என நிபுணர்கள் என தங்களை அழைத்துக் கொள்ளும் சிலர் தெரிவித்துள்ளனர்.

அவ்வாறாயின் மஹரசிறைக்கலவரத்தில் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் புதைக்கப்பட்ட விவகாரத்தில் மாத்திரம் இது ஏன் பொருந்தவில்லை? உயிர்த்த ஞாயிறு தாக்குதலைப் பயன்படுத்தி ஆட்சியைக் கைப்பற்றிய அரசு ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றது” என்றார்.