கொரோனாக் கட்டுப்பாடு குறித்து மக்களை தெளிவுபடுத்தல் அவசியம் – ரணில் கோரிக்கை

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்பாக அரசு மக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

பியகம பிரதேசத்தில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அத்தோடு தொற்று மேலும் அதிகரித்துவரும் நிலையில், அங்கீகரிக்கப்படாத மருந்துகளை அமைச்சர்கள் பெற்றுக் கொள்வது தவறானது எனவும் அவர் குறிப்பிட்டார். இது குறித்து ஆராய்வதற்கு தேவையான நபர்கள் இலங்கையில் உள்ளதாகவும் ரணில் தெரிவித்தார்.