ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதித் தலைவர் சம்பிக்க? 19ஆம் திகதி முடிவு தெரியும்

ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து, பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க விலகியுள்ள நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியில் அவருக்குப் புதிய பதவியொன்று வழங்கப்படவுள்ளது எனத் தெரியவருகின்றது.

இதன்படி அவர் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதித் தலைவராக நியமிக்கப்படலாம் என அறியமுடிகின்றது. ஐக்கிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழுக் கூட்டம் எதிர் வரும் 19 ஆம் திகதி பண்டாரவளையில் நடைபெறவுள்ளது.

இதன்போது இது பற்றி இறுதி முடிவு எடுக்கப்படலாம்.