யாழ்ப்பாணத்தில் 400 குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தலில் – அரச அதிபர் தகவல்

Red an white warning sign on a fence stating in "Quarantine - Coronavirus beyond this point" with a blank space underneath.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேலும் 400 குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளன என்று மாவட்ட செயலாளர் க.மகேசன் தெரிவித்தார்.

அத்துடன், யாழ்ப்பாணத்தில் கடந்த ஒக்ரோபர் 4ஆம் திகதிக்குப் பின்னர் 59 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 31 பேர் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 18 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

“யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மருதனார்மடம் கொரோனா வைரஸ் பரவல் கொத்தணியை அடுத்து மேலும் 400 குடும்பங்கள் கடந்த மூன்று நாள்களில் சுயதனிமைப்படுத் தப்பட்டுள்ளன. இதன்மூலம் யாழ்ப்பாணத்தில் ஆயிரத்து 144 குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

மருதனார்மடம் பொதுச் சந்தை மற்றும் அதனை அண்டிய வர்த்தக நிலையங்கள் மறு அறிவித்தல்வரை மூடப்பட்டுள்ளன” என்றும் மாவட்ட செயலாளர், க.மகேசன் கூறினார்.