ஐ.தே.க.வின் புதிய தலைவர் ஜனவரி 1 இல் நியமனம்?

ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய தலைவர் 2021 ஜனவரி முதலாம் திகதி நியமிக்கப்படவுள்ளார் எனத் தெரியவருகின்றது.

ஐ.தே.கவின் மத்தியசெயற்குழுக் கூட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. இதன்போது இது பற்றி இறுதி முடிவு எடுக்கப்படும் என அறியமுடிகின்றது.

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமைப்பதவிக்கு சிலரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளமையால் வாக்கெடுப்பின் மூலமே புதிய தலைவர் நியமிக்கப்படுவார் என அக்கட்சியின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.