3 ஆவது அலையை தவிர்க்க வேண்டும் – கொழும்பு மேயர் கோரிக்கை

கொழும்பில் கொரோனா நிலைமை நகரசபை அதிகாரிகள் இராணுவம் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இருப்பினும் பண்டிகைக் காலத்தில் மூன்றாவது அலைகளைத் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் எனக் கொழும்பு மேயர் ரோஸி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு மேயரின் வேண்டுகோளின் பேரில் கொரியாவின் சியோல் பெருநகர அரசு நேற்று 18,000 முக்கவசங்களை வழங்கியது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே கொழும்பு மேயர் மேற் கண்டவாறு தெரிவித்தார்.