மிகவும் துயரமான காலத்தின் முடிவின் ஆரம்பம் இது – அமெரிக்காவில் முதலாவது கொரோனா வைரஸ் மருந்து வழங்கப்பட்ட மருத்துவ தாதி கருத்து

அமெரிக்காவில் தீவிரகிசிச்சை பிரிவை சேர்ந்த தாதிக்கு முதலாவது கொரோனா மருந்து வழங்கப்பட்டுள்ளது. முதலாவது கொரோனா வைரஸ் மருந்தினை நோயாளிக்கும் வழங்கும் நடவடிக்கைகள் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளன.

நியுயோர்க் லோங்ஐலன்டில் உள்ள தீவிரகிசிச்சை பிரிவில் பணியாற்றும் தாதியொருவருக்கு முதலாவது கொரோனாமருந்து வழங்கப்பட்டுள்ளது.

நியுயோர்க்கின் குயின்ஸின் லோங்ஜலன்ட் மெடிகல் சென்டரை சேர்ந்த சன்டிரா லின்ட்சே என்ற தாதிக்கு அமெரிக்காவின் முதலாவது கொரோனா மருந்து வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமெரிக்க ஊடகங்கள் முதல் மருந்தினை வழங்குவது வீடியோ மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டது எனவும் தெரிவித்துள்ளன.

கொரோனா வைரஸ் மருந்து ஏனைய மருந்துகளை போல காணப்பட்டது நான் வித்தியாசம் எதனையும் உணரவில்லை என சன்டிரா லின்ட்சே தெரிவித்துள்ளார். நான் நன்றாக உணர்கின்றேன்,உலகம் முழுவதும் இந்த கொரோனா வைரசிற்கு எதிராக பெரும் சேவை ஆற்றிக்கொண்டிருக்கின்ற அனைத்து முன்னிலை பணியாளர்கள் எனது சகாக்கள் அனைவருக்கும் என நன்றியை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.

நான் இன்று நம்பிக்கையுடன் இருக்கின்றேன்,நிம்மதியடைந்துள்ளேன்,குகுணப்படுத்தல் ஆரம்பமாகிவிட்டது என கருதுகின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எங்கள் வரலாற்றின் மிகவும் துயரமான காலத்தின் முடிவின் ஆரம்பம் இதுவென கருதுகின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கொரோனா வைரசினை வழங்கும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன 150 மருத்துவமனைகளுக்கு மருந்துகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என அமெரிக்க செய்திகள் தெரிவித்துள்ளன. ஏப்பிரல் மாதத்திற்குள் 100 மில்லியன் பேருக்குகொரோனா வைரசினை வழங்குவதற்கு அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

அமெரிக்காவின் பெரும்பகுதியை கொரோனா வைரஸ் மோசமாக பாதித்துள்ள நிலையிலேயே கொரோனா வைரஸ் மருந்தினை வழங்கும் நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகியுளளன. அமெரிக்காவில் கொரோனா வைரஸ் காரணமாக மருத்துவமனைகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்று இலட்சத்தை நெருங்கியுள்ளது. நவம்பர் மாதத்திலிருந்து அமெரிக்காவில் மருத்துவமனைகளில் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன.