மருதனார்மடம் பகுதியில் மேலும் ஐவருக்கு கொரோனா

மருதனார்மடம் பொதுச் சந்தையில் கொரோனா வைரஸ் கொத்தணியில் நேற்றுத் திங்கள்கிழமை முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் 5 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

மருதனார்மடம் கொரோனா தொற்றுப் பரவல் கொத்தணி கண்டறியப்பட்ட பின்னர் வலிகாமம் கல்வி வலயத்துக்கு உட்பட்ட உடுவில் மற்றும் தெல்லிப்பழை கல்விக் கோட்டப் பாடசாலைகள் நேற்றுத் திங்கட்கிழமை மூடப்பட்டன.

இந்நிலையில் யாழ்ப்பாணம் மற்றும் வலிகாமம் கல்வி வலயங்களுக்கு உட்பட்ட அனைத்துப் பாடசாலைகளும் இன்று முதல் மறு அறிவித்தல் வரை மூடப்படுகின்றன” என்றார்.