உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5.08 கோடியாக உயர்வு

உலகம் முழுவதையும் அச்சுறுத்திவரும் கொரோனா வைரசின் முதல் கட்ட அலை முடிந்த நிலையில், தற்போது 2-வது கட்ட கொரோனா அலை அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் தனது கோர முகத்தை காட்டி வருகிறது.

உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 72,644,125 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 5,08,64,105 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 16 லட்சத்து 18 ஆயிரத்து 858 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு தற்போது வரை 20,161,162 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 106,189 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா மற்றும் பிரான்ஸ் ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.