யாழ்ப்பாணம் உட்பட விமான நிலையங்கள் 26ஆம் திகதி திறப்பு

இலங்கையில் எதிர்வரும் 26ஆம் திகதி முதல் விமான நிலையங்களைத் திறக்க எதிர்பார்த்துள்ளோம் என சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

வணிக மற்றும் விசேட விமான சேவைகளை முதலில் ஆரம்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என அதன் தலைவர் உபுல் தர்மதாஸ தெரிவித்தார். கட்டுநாயக்கா, மத்தள, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு விமான நிலையங்களுக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் மற்றும் பின்பற்ற வேண்டிய சுகாதார வழிமுறைகள் பின்னர் வெளியிடப்படவுள்ளன. சர்வதேச விமான பயணங்களுக்காக இலங்கையை மீண்டும் திறப்பது தொடர்பிலான திகதி விரைவில் அறிவிக்கப்படும்” என்றார்.