உடுவில் பிரதேச முடக்கல் நீக்கப்பட்டது – இருப்பினும் பாடசாலைகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்

உடுவில் பிரதேசத்தில் நடைமுறையில் உள்ள சமூக முடக்கல் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் நேற்றிரவு நீக்கப்பட்டது.

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரனின் உத்தரவுக்கு அமையவே இந்த முடக்கம் நீக்கப்பட்டது.

இருந்த போதிலும், உடுவில் கல்விக்கோட்டத்துக்கு உட்பட்ட 33 பாடசாலைகளும், தெல்லிப்பழை கோட்டத்திற்கு உட்பட்ட 40 பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன.

இதேவேளை, மருதனார்மடம் பொதுச் சந்தைக் கொத்தணியாலேயே இந்த இரு கல்விக் கோட்டங்களின் பாடசாலைகளும் மூடப்பட்டன. மருதனார் மடத்தில் முதல் தொற்றாளியாக அடையாளம் காணப்பட்டவரின் மகளுக்கும் தொற்று இருந்தமை கண்டறியப்பட்டது.

அவர் கடந்த வாரம் பாடசாலைக்கு சென்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.