அரசுடன் பேசுவதற்கான புதியதொரு அரசியல் அணுகுமுறையை தமிழ்த் தரப்புக்கள் உருவாக்க வேண்டும் – சுரேன் ராகவன்

மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சியிலுள்ள, தேசியவாத தென்னிலங்கை அரசுடன், தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் தொடர்பில் பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதற்கு, புதியதொரு அணுகுமுறையையும் அரசியல் மொழியையும் உருவாக்க வேண்டிய பொறுப்பு தமிழ் புத்திஜீவிகளுக்கும் அரசியல் பிரதிநிதிகளுக்கும் இருப்பதாக பாரளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சியொன்றின் நேரடி அரசியல் விவாத நிகழ்ச்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பெரும்பான்மை பௌத்தர்களின் அமோக ஆதரவினை பெற்று, ஆழமான சிங்கள தேசியத்துவத்துடன் தற்போது ஆட்சியமைத்துள்ள அரசுடன் பேசுவதற்கு தமிழ் அரசியல் தரப்பின் ஒற்றுமையும் முக்கியமானதாக காணப்படுவதாக கலாநிதி ராகவன் மேலும் தெரிவித்தார்.