காசுக்காக கூடுவது கும்பல்; லட்சியத்திற்காகத் திரள்வதன் பெயர் புரட்சி – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்

“சீரமைப்போம் தமிழகத்தை” என்ற முழக்கத்துடன் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது முதல்கட்ட தேர்தல் பிரசாரத்தை மதுரையில் இன்று தொடங்கி உள்ளார். மதுரையில் முதல்கட்ட தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுவரும் கமல்ஹாசனுக்கு அக்கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்நிலையில் காசுக்காக கூடுவது கும்பல் என்றும், லட்சியத்திற்காகத் திரள்வதன் பெயர் புரட்சி என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “காசுக்காகக் கூடுவது கும்பல்; லட்சியத்திற்காகத் திரள்வதன் பெயர் புரட்சி! மக்கள் புரட்சியை மதுரையில் நிகழ்த்திக் காட்டிய எம் கட்சியின் அனைத்து நிர்வாகிகளுக்கும், அணிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள். எதுவும்தடையில்லை. சீரமைப்போம்தமிழகத்தை” என்று கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.